கோவை பொள்ளாச்சியில் ஜூலை 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை அமைக்க பூமி பூஜை..!

தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக பொள்ளாச்சி கோவை ரோடு ஆச்சிபட்டி அருகே உள்ள தனியார் மைதானத்தில் மேடை அமைக்கும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இன்று பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை: பொள்ளாச்சியில் ஜூலை 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

பொள்ளாச்சியில் வரும் ஜூலை 15-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

இதற்காக பொள்ளாச்சி கோவை ரோடு ஆச்சிபட்டி அருகே உள்ள தனியார் மைதானத்தில் மேடை அமைக்கும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இன்று பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணை செயலாளர் மருத்துவர் மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி, தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன், ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் திருமதி, தமிழ்மணி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் முதல்வர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...