கோவை குரும்பபாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் புகுந்து 20 லிட்டர் பெட்ரோல் திருட்டு - இளைஞர் கைது….!

இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மூன்று இளைஞர்கள், 20 லிட்டர் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு பணம் கொடுக்காமல் மின்னல் வேகத்தில் தப்பினர்.


கோவை: கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன்(62). இவர் அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

நேற்று இரவு அவர் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருந்த போது, அங்கு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மூன்று இளைஞர்கள், பெட்ரோல் பங்கில் 20 லிட்டர் பெட்ரோலை, நிரப்பிக் கொண்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தனர். அதிர்ச்சியடைந்த காவலாளி, அவர்களை பிடிக்க, முயற்சி செய்தும் அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர்.

பின்னர், குணசேகரன் சக ஊழியர் ஒருவரை அழைத்து கொண்டு அருகில் உள்ள இடங்களில் அந்த இளைஞர்களை தேடினார். அப்போது, தப்பிச் சென்றமூவரில், ஒருவரை பார்த்துள்ளனர். உடனே, காவலாளி குணசேகரன், அந்த இளைஞரை மடக்கி பிடித்து, கோவில்பாளையம் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தார்.

விசாரணையில், பிடிபட்ட நபர் சிவகங்கையை சேர்ந்த செல்வகுமார் (27) என்பதும், தப்பியது அவரது நண்பர்கள் மனோஜ் கண்ணா மற்றும் மகாராஜா என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அவரது இரு நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...