மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவி அருவியில் காட்டாற்று வெள்ளம்..!

தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து, அருவிக்கு யாரும் செல்லாத வகையில் முகப்பு கதவுகள் மூடப்பட்டு வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை ஆழியாறு கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே, ஆழியார் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால், பொள்ளாச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியாறு கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து, அருவிக்கு யாரும் செல்லாத வகையில் முகப்பு கதவுகள் மூடப்பட்டு வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, அருவியில் இருந்து வரும் தண்ணீர் நேரடியாக ஆழியாறு அணைக்கு செல்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஆழியாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...