கோவை மாவட்ட பாஜகவினர் தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்..!

மனசாட்சியின் படி பதவியேற்றவர்கள் மனசாட்சி இல்லாமல் செயல்படுவதைக் கண்டித்து, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழகம் முழுவதும் இன்று தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தா காலனி பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.



இதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், மனசாட்சியின் படி பதவியேற்றவர்கள் மனசாட்சி இல்லாமல் செயல்படுவதைக் கண்டித்து, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகின்றது.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை மாற்றியமைத்து மத்திய பாஜக அரசு மக்களுக்கு பயனளித்துள்ளது. பாஜக ஆளும் மாநில அரசுகளும் வரியை குறைத்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்ற, திமுக அதை செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. லாக்கப் மரணங்கள் அதிகரித்துள்ளது. குடும்பப் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்த தாலிக்குத் தங்கம், இரு சக்கர வாகனம் போன்ற திட்டங்களை இந்த அரசு நிறுத்தி விட்டது.

சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறுத்தி இருக்கின்றது. கோவையில் சாலைகள் மோசமாக இருக்கின்றது. முழுமையாகச் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி பணிகள் வேகப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...