கோவையில் தீர்வு காணப்படாத மனுக்கள் குறித்து விளக்கம் கேட்ட சட்டமன்றப் பேரவை ஏடுகள் குழுவினர்..!

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, பேரவையின் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் தலைவர், இராமகிருஷ்ணன் தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டனர்.



கோவை: கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, பேரவையின் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் முடிக்கப்படாமல் இருக்கும் அரசு திட்டங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

அரசு வழங்கும் முதலீடுகள் எந்த நோக்கத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதோ, அத்திட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா..? என ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு துறைக்கும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முதலீடுகளுக்கான கணக்குகளையும், தணிக்கை கணக்குகளையும், சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதே இக்குழுவின் நோக்கமாகும்.



அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, பேரவையின் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டனர்.



இக்குழுவின், தலைவர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், இக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் அப்துல் வஹாப், பொன்னுசாமி உள்ளிட்டோர், கோவை மாவட்டத்தில் முடிக்கப்படாமல் இருக்கும் அரசு திட்டங்கள் மற்றும் மனுக்கள் குறித்து விளக்கம் கேட்டனர்.



கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், வருவாய் அலுவலர், மேயர் மற்றும் துணை மேயர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்குழுவின், கீழ் கிட்டத்தட்ட 64 பொதுத்துறை நிறுவனங்கள், 2 வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...