செல்லப் பிராணிகளுக்கு மின் மயானம் வேண்டும் - எழுச்சி கரங்கள் அறக்கட்டளையினர் மனு

நகர்ப்புறத்தில் செல்லப் பிராணிகளை அடக்கம் செய்ய மின் மயானத்திற்கும், பராமரிப்பிற்கும் இடமும் ஒதுக்கும் பட்சத்தில், அரசு சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செல்லப் பிராணிகளை பராமரிப்போம் என்று மனு அளித்துள்ளனர்.



கோவை: செல்லப் பிராணிகளை அடக்கம் செய்ய மின் மயானம் வேண்டும், என்று கோவையை சேர்ந்த எழுச்சி கரங்கள் அறக்கட்டளையினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அறக்கட்டளையின் அறங்காவலர் ராஜ் கிருஷ்ணா அளித்த மனுவில், எங்கள் அறக்கட்டளை சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக செல்லப் பிராணிகள் சாலை விபத்துகளில் அடிபட்டு கிடந்தால் முதலுதவியும், உயிரிழந்து கிடந்தால் நல்லடக்கமும் செய்து வருகிறோம்.



கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த கருணாகரனிடம், மயானம் அமைக்க இடம் ஒதுக்க மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், கிணத்துக்கடவு பகுதியில் இடம் ஒதுக்க பரிந்துரைத்தார். நாங்கள் நகர்ப்புற பகுதியில் இடம் கேட்டதால், பரிசீலனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். பின்னர், பொதுமக்கள் நகர்ப்புற பகுதியில் செல்லப் பிராணிகளை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், மிகவும் சிரமமாக உள்ளது, எனக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நகர்ப்புறத்தில் செல்லப் பிராணிகளை அடக்கம் செய்ய மின் மயானத்திற்கும், பராமரிப்பிற்கும் இடமும் ஒதுக்கும் பட்சத்தில், அரசு சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செல்லப் பிராணிகளை பராமரிப்போம், என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...