திருப்பூர் மாவட்ட காது கேளாதோர் நல சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்..!

காது கேளாதோருக்கு ஆவின் பாலகம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட 19-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருப்பூர் மாவட்ட காது கேளாதோர் நல சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் 19-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட காது கேளாதோர் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முதல்வரை சந்திக்க வாய்ப்பு வழங்க வேண்டும், காது கேளாதோருக்கு 80-சதவீதம் மேல் விழுக்காடு உள்ளவர்களுக்கு குரூப் 4-தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு வரிசை அடிப்படையில் அரசுத்துறையில் ஒரு சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.



காது கேளாதோருக்கு ஆவின் பாலகம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் நல சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.



போராட்டத்தின் ஒரு பகுதியாக கோரிக்கைகள் அடங்கிய மனுவை காது கேளாதோர் நல சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.



போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சைகைகள் காண்பித்தவாறே விசிலடித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...