கோவை பொள்ளாச்சியில் 3-மணி நேரத்திற்கும் மேலாக மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, வியாபாரிகள் கவலை..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பொள்ளாச்சியில் தொடர்ந்து 3-மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் 3-மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது விட்டு விட்டு லேசாக மழை பெய்து வந்தது.



இந்த நிலையில், இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, 11 மணிக்கு மேல் தொடர்ந்து நல்ல மழை பெய்து பெய்து வருகிறது.

இதனால், சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடிகிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.



கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் கடைவீதி, மார்க்கெட் ரோடு, கோவை ரோடு, உள்ளிட்ட வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் வருகை இன்றி வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும் பொள்ளாச்சியில் குளுமையான சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...