கோவை ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு: பால் பாக்கெட்டுகள் உடைந்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை..!

ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் கோவை ஆர்.எஸ்.புரம், சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆவின் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். எவ்வாறு பால் முகவர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது, மற்றும் பேக்கிங் முறைகள் குறித்து ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். பால் பாக்கெட்டுகள் உடைந்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோவை ஆர் எஸ் புரம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, சுந்தரேசன் லே அவுட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் ஆவின் சார்பில் விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் உடைந்து வந்ததால், முகவர்கள் நஷ்டமடைந்து உள்ளனர்.

ஒரு சில பாக்கெட்டுகளில் ஓட்டை ஏற்பட்டு குறைவான பாலோடும், ஒரு சில இடங்களில் காலி கவர்களாவும் வந்துள்ளது. குறிப்பாக 150-லிட்டர் பாலில், 25-லிட்டர் வீணாகி உள்ளது. இதனால் முகவர்களின் முதலீடு பணத்திலேயே நஷ்டம் ஏற்படும் நிலையில், இது குறித்து, ஆவின் நிர்வாகத்திற்கு பால் முகவர்கள் சங்கம் புகார் அளித்தது.

அதில் முறையாகப் பால் விநியோகம் செய்யமல், எதில் ஊழல் செய்யலாம் என அதிகாரிகள் காத்திருப்பதாகவும், இதனால் முகவர்கள் மட்டுமின்றி ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் இன்று காலை முதல் கோவை ஆர்.எஸ்.புரம், சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆவின் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். எவ்வாறு பால் முகவர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது, மற்றும் பேக்கிங் முறைகளை ஆய்வு செய்தனர். மேலும் முறையாகக் கண்காணிக்கவும் அதிகாரிக்கு உத்தர விட்டுச் சென்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...