கோவையில் சமூக ஆர்வலர் தீஸ்தா, ஊடகவியலாளர் சுபைர், ஸ்ரீகுமார் ஐ.பி.எஸ்.ஆகியோரது கைதை கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், ஊடகவியலாளர் முஹமத் சுபைர், ஸ்ரீ குமார் ஐபிஎஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


கோவை: பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், ஊடகவியலாளர் முஹமத் சுபைர், ஸ்ரீ குமார் ஐபிஎஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.



குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், ஸ்ரீகுமார் ஐ.பி.எஸ், ஊடகவியலாளர் முஹமத் சுபைர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து SDPI கட்சியின் சார்பாக நாடு எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள, பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட செயலாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார்.



இதில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காந்திநகர், குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டை அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும், தொடர்ந்து இது போன்ற அடக்கு முறைகளை ஏவி விடும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். இது போன்ற சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர் கைது நடவடிக்கைகளால் அடக்குமுறையை ஏவி விடும் மத்திய பா.ஜ.க விற்கு எதிராக இந்த கண்டன போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.



இதில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...