கோவையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களிடம் மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் கலந்துரையாடல்….!

ஆட்டோ ஓட்டுநர்கள், சவாரி அழைத்து செல்லும் போது ஒரு சிலர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வண்ணம் செயல்படுவதாக புகார்கள் வருவதாகவும், இது போன்று புகார்கள் வராத வண்ணம் பார்த்து கொள்ளுங்கள் என்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாநகரில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விபத்துகள் குறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் கலந்துரையாடினார்.



கோவை உப்பிலிபாளையம் பகுதியில், நடைபெற்ற சந்திப்பில் பேசிய போக்குவரத்து துணை ஆணையர், "சாலை விபத்துகளே இல்லாத மாநகராக கோவையை கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விபத்துகளை குறைக்க பள்ளி மாணவர்களிடம் இருசக்கர வாகனங்களை தர வேண்டாம் எனவும் லைசன்ஸ் இல்லாமல் அவர்கள் வாகனங்களை இயக்கினால் அவர்கள் மீதும் வாகனத்தை தந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.

பெட்ரோல் பங்குகளில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வந்தால், அங்குள்ள சிசிடிவிகளை ஆராய்ந்து சமந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், சவாரி அழைத்து செல்லும் போது ஒரு சிலர் தவறாக உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வண்ணம் செயல்படுவதாக புகார்கள் வருவதாகவும், இது போன்று புகார்கள் வராத வண்ணம் பார்த்து கொள்ளுங்கள்" என்று ஆட்டோ ஓட்டுனர்களிடம் கூறினார்.



கூட்டத்தில், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் அவர்கள் சந்தித்து வரும் சிக்கல்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...