போதைப் பொருளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த மாட்டேன் மற்றும் தனது உறவினர்கள் நண்பர்களையும் பயன்படுத்த விட மாட்டேன் என வாகன ஓட்டிகளை உறுதிமொழி ஏற்க செய்தனர்.
திருப்பூர்: சர்வதேச 'போதைப்பொருள் விழிப்புணர்வு' தினத்தை முன்னிட்டு வாகன ஓட்டிகளை போலீசார் உறுதிமொழி ஏற்க செய்தனர்.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஜூன் மாதம் 26 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக தமிழக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், போதைப்பொருள் விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக 26-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்குத் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
அதன்படி, திருப்பூர் மங்கலம் சாலை வாகன சோதனை சாவடியில் சென்ட்ரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையில், வாகன ஓட்டிகளுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கி கூறினர்.
மேலும், போதைப் பொருளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த மாட்டேன் மற்றும் தனது உறவினர்கள் நண்பர்களையும் பயன்படுத்த விட மாட்டேன் என வாகன ஓட்டிகளை உறுதிமொழி ஏற்க செய்தனர்.