ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 'நான் முதல்வன்' என்னும் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு எனும் வழிகாட்டுதல் நிகழ்வை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக கல்லூரி கனவு எனும் வழிகாட்டுதல் நிகழ்வை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 'நான் முதல்வன்' என்னும் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு எனும் வழிகாட்டுதல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

2021-22 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியை தேர்ந்தெடுத்தல் மற்றும் தங்கள் தனித்திறனுக்கு ஏற்றவாறு உயர்கல்வியை தேர்வு செய்வது குறித்த வழிகாட்டும் நிகழ்ச்சியை மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இதில், திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய, செய்தித்துறை அமைச்சர் தமிழக அரசு மாணவ-மாணவியர்களுக்கான பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உயர்கல்வியை குழப்பம் இல்லாமல் தேர்ந்தெடுப்பதற்கான வழியை ஏற்படுத்தி இருப்பதாகவும், மாணவ-மாணவிகள் கல்வியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு உயர்ந்த பாதையை அடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஸ்டால்கள் மற்றும் கல்வி கடன் பெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வங்கிகளின் ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன.