மாநகர சாலைகளில் நவீன தொழில்நுட்பம் மூலம் இணையதளம் மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி போக்குவரத்து மேலாண்மை மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்தான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.
மாநகர சாலைகளில் நவீன தொழில்நுட்பம் மூலம் இணையதளம் மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி போக்குவரத்து மேலாண்மை மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சாலையில் பாதுகாப்பினை உறுதி செய்து விபத்துக்களைக் குறைப்பது, அனைத்து வகையான போக்குவரத்துகளின் பயன்பாட்டை அதிகரிப்பது, சிறந்த போக்குவரத்து சாலைகள் மற்றும் அட்டவணைகளைத் திட்டமிடல், வாகன நிறுத்துமிடங்கள் மூலம் வருவாய் அதிகரித்தல், சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது போன்றவை இதன் சிறப்பம்சங்களில் அடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, மாநகர காவல் துணை ஆணையர் மதிவாணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.