கோவையில் உள்ள 150-அரசு பள்ளிகளை, பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தத்தெடுத்துள்ளது.
கோவை: கோவையில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 113-அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான மேல்நிலை படிப்பு மற்றும் திறன் மேம்பாடு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
முன்னதாக கோவையில் உள்ள 150-அரசு பள்ளிகளை, பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தத்தெடுத்துள்ளது. அதற்காகக் கல்லூரிகளுடன் அரசு பள்ளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
தமிழகத்திலேயே முதல் முறையாக 150-அரசு பள்ளிகளை, கல்லூரிகள் தத்தெடுத்து 2-ஆண்டுகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்க உள்ளனர்.