அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பிற்கும் மற்றும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பிற்கும் ரூ.50,000/- மதிப்பீட்டில் 3-ஆண்ட்ராய்டு புரெஜெக்ட்டர்களும், இணையவசதியும், மாநகராட்சி ரோட்டரி மற்றும் ஸ்கைலின்க் உதவியுடன் மேயர் முன்னிலையில் பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட்டது.
கோவை: கோவையில் 10-வது வார்டுக்குட்பட்ட அரசு உயர்நிலை பள்ளிக்கும் மற்றும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கும் 3-ஆண்ட்ராய்டு புரெஜெக்ட்டர்கள் வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து அரசு பள்ளிகளின் வகுப்பறைகளை E-Classroom ஆக மாற்ற வேண்டும் என்பதற்காக Digitally Connected என்ற திட்டம் வகுக்கப்பட்டு, முதற்கட்டமாக 10-வது வார்டுக்குட்பட்ட பூந்தோட்டம் நகரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பிற்கும் மற்றும் ஷாஜகான் நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பிற்கும் ரூ.50,000/- மதிப்பீட்டில் 3-ஆண்ட்ராய்டு புரெஜெக்ட்டர்களும், முற்றிலும் இணையவசதியும் கோயம்புத்தூர் மாநகராட்சி ரோட்டரி மற்றும் ஸ்கைலின்க் உதவியுடன் மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னிலையில் பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், தன்னார்வ அமைப்பினர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.