கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் டெங்கு காய்ச்சலை பரப்பும் 'ஏடிஸ்' வகை கொசுக்கள் மழை காலங்களில் பெருக்கம் அடைகிறது. இந்த ஆண்டில் மே மாதம் வரை 2548-பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவை: டெங்கு மற்றும் கொரோனா ஒரே நேரத்தில் பரவுவதைத் தடுக்க தமிழக அரசின் அறிவுறுத்தல் படி பொதுச் சுகாதாரத் துறை பல்வேறு வகையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட சுகாதார துணை இயக்குனர்களுக்கு பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அடுத்து வரும் மாதங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால்கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து மாவட்ட சுகாதாரத் துறைக்கு சரியான தகவல் அளிக்க வேண்டும் என்றும் 'லார்வா' உற்பத்தி குறித்து கண்காணிக்க வேண்டும்.
அனைத்து பொது இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மழை நீர் தேங்கி விடாமலும் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் போதுமான அளவு குளோரின் கலந்து விநியோகிக்க வேண்டும். நிலவேம்பு குடிநீர் விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பரிசோதனை தமிழகத்தில் 24-ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்றும், அதில் சென்னையில் 543, செங்கல்பட்டில் 240, திருவள்ளூரில் 75, கோவையில் 181, கன்னியாகுமரி 62, காஞ்சிபுரத்தில் 47, திருநெல்வேலி 31, தூத்துக்குடியில் 30 பேர் என மொத்தம் 1461 பேருக்கு தொற்று உறுதியானது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 697 பேர் குணமடைந்து விட்டனர். மருத்துவமனைகளில் 404 பேர் உட்பட 8222 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.