"E"VER GREEN "P"OWERFUL "S"TAR கழகம் காக்க வந்த காவலரே! தலைமை ஏற்க வா.. என மாநகர பகுதிகளில் EPS-க்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் சார்பில் லங்கா கார்னர், அவினாசி மேம்பாலம், ஆகிய பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகர பகுதிகளில் EPS-க்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
"கழகம் காக்க வந்த காவலரே தலைமை ஏற்க வா" என கோவை அதிமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்து வரும் நிலையில், பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில், ஆதரவு செயல்பாடுகளை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் பகுதியில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் "E"VER GREEN "P"OWERFUL "S"TAR கழகம் காக்க வந்த காவலரே! தலைமை ஏற்க வா... என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
கோவையில் லங்கா கார்னர், அவினாசி மேம்பாலம், ஆகிய பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.