'கோவை மாநகரின் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது'- தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை..!

காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இரவு நேர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் காவல்துறை ரோந்து பணியில் அதிக காவலர்களை ஈடுபடுத்த வேண்டும். மாநகரின் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது என தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கோவை: காந்திபுரம் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோவை மாநகர காவல்துறையை வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தலைநகர் சென்னைக்கு அடுத்து, மிகப்பெரிய தொழில் மாநகரம் கோவை. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்கள், பிற நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் தினமும் கோவை மாநகருக்கு வந்து செல்கின்றனர்.

கோவையில் மிக மிக முக்கியமான இடமாக இருப்பது காந்திபுரத்தில் உள்ள உள்ளூர், வெளியூர் பேருந்து நிலையங்கள் தான். உள்ளூர், வெளியூர் பயணிகள் காந்திபுரம் பேருந்து நிலையம் வழியாக கோவைக்குள் நுழைகின்றனர். இந்த பேருந்து நிலையத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கும் செல்கின்றனர். கோவையில் ஓடும் பெரும்பாலான பேருந்துகள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பேருந்து நிலையம், இரவு நேரங்களில் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இப்போதெல்லாம் இரவு, பகல் என்று நேரம் காலம் இல்லாமல், பெண்கள் குறிப்பாகக் கல்லூரி மாணவிகளும் பயணிக்க வேண்டியுள்ளது. பேருந்து நிலையங்கள் பாதுகாப்பானவை, ஆபத்து இல்லாதவை என்ற நம்பிக்கையில் தான் பெண்களும், மாணவிகளும் பயணிக்கின்றனர். அவர்களது குடும்பத்தினரும் அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால், காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் சில தனியார் பேருந்து ஓட்டுநர்கள், மது போதையில் பணிக்கு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். போதையில் இருக்கும் ஓட்டுநர்கள் தன்னிலை மறந்து அவ்வப்போது பயணிகளுடன் தகாராறில் ஈடுபடுகின்றனர். இதனால், பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.

பயணிகளைத் தாக்குவதும், கண்ணியக்குறைவாக நடந்து கொள்வதும் அதிகரித்து விட்டன. சில நாட்களுக்கு முன்பு அரசு பேருந்து ஊழியர்கள் தாக்கப்பட்டதால், அவர்கள் பேருந்துகளை நிறுத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தொல்லையும் அதிகரித்துள்ளதாகவும், பணம் கேட்டு மிரட்டுதல், கழிவறைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது என்று பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும், எனது கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, கோவை மாநகராட்சி, மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட்டு, காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இரவு நேர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் காவல்துறை ரோந்து பணியில் அதிக காவலர்களை ஈடுபடுத்த வேண்டும்.

மது குடித்து விட்டு பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீதும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாநகரின் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...