காவலர் குடியிருப்பில் கணவன் மனைவி இருவரும் நேற்று உருட்டு கட்டையால் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மனைவி மீது 2-பிரிவுகளில், கணவன் மீது 3-பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில்காவல் ஆய்வாளர்அவரது கணவருடன்மோதல் தொடர்பாக போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் புதுமந்து காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வீரம்மாள். இவரது கணவர் சரவணன் தனியார் கல்லூரி பேராசிரியர். இவர்கள் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் நேற்று உருட்டு கட்டையால் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இது தொடர்பாக கணவர் சரவணன் பந்தய சாலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து காவல் ஆய்வாளர் வீரம்மாள் மீது ஆபாசமாகப் பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல காவல் ஆய்வாளர் வீரம்மாள் கொடுத்த புகார்அடிப்படையில் கணவர்சரவணன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.