கோவை பொள்ளாச்சி அருகே அக்காவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய நபரை கத்தியால் குத்திய தம்பி கைது..!

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் தம்பியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே அக்காவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய நபரை கத்தியால் குத்திய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த சின்னம்பாளையத்தைச் சேர்ந்தவர் 32 வயதான நிஷார் அகமது. இவர் பனியன் வியாபாரியாக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் whatsapp எண்ணிற்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த பெண்ணின் 17-வயதான தம்பி நிஷார் அகமது கேட்டபோது இருவருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிஷார் அகமதுவை அந்த பெண்ணின் தம்பி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க பட்டதையடுத்து, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் தம்பியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...