கோவையில் பேருந்து நிலைய பொது கழிப்பிடத்திற்கு சென்ற இளைஞரிடம் செல்போன், பணம் திருட்டு - இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பறையில் சிறுநீர் கழிக்கச் சென்ற நபரிடம், சிறுவர்கள் இருவர் துணையோடு செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பறையில் சிறுநீர் கழிக்கச் சென்ற நபரிடம், சிறுவர்கள் இருவர் துணையோடு செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கோவை வந்திருந்தார். குனியமுத்தூர் பகுதிக்கு செல்வதற்கு அவர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள பொது கழிப்பிடத்திற்கு சிறுநீர் கழிக்க விஜயகுமார் சென்றுள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற 2 சிறுவர்கள் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் விஜயகுமாரை மடக்கி உள்ளனர். மூவரும் சேர்ந்து விஜயகுமாரின் கைகளை இறுக்கமாக பிடித்து, அவரிடம் செல்போன் மற்றும் சுமார் ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடினர். பணம் மற்றும் செல்போனை பறிகொடுத்த விஜயகுமார் காட்டூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காந்திபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் மற்றும் இரண்டு சிறுவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...