'கொள்ளை போகும் கனிம வளம்' - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

கனிம வளங்களை கொள்ளை அடித்து வருகிற கும்பல்களை கைது செய்யக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் இடிக்கப்பட்ட தாட்கோ கடைகளை மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கே கட்டிதர வேண்டும். அதே போல் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மெட்ராத்தி கிராமத்தில் கனிம வளங்களை கொள்ளை அடித்து வருகிற கும்பல்களை கைது செய்ய வேண்டும் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தலித் விடுதலை கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதற்கு மாநில பொதுச்செயலாளர் செங்கோட்டையன் கண்டன உரையாற்றினார். மாநகர் மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். இணை பொதுச்செயலாளர் சகுந்தலா தங்கராஜ், மாநில செயலாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...