வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியை விரிவு படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயில போதிய இடவசதி இல்லாததால் உடனடியாக பள்ளியை விரிவு படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54-வது வார்டில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆனது கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.



வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்தப்பட்ட போதிலும் தேவையான கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. குறிப்பாக இந்த பள்ளியில் 20-வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் வகுப்பறை இன்றி வராண்டாவில் அமர்ந்து கல்வி கற்று வருகின்றனர்.

போதிய கழிப்பறை வசதிகள் இல்லை, மேலும் ஆய்வகங்கள் கம்ப்யூட்டர் லேப் போன்ற வசதிகளை செய்து கொடுக்க இந்தப் பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இந்தப் பள்ளியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது.



அங்கு இந்த பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டமைப்பு வசதிகளை செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 54-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அருணாசலம் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...