கோவை கணபதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!

தங்களது கோரிக்கைக்கு மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக வ உ சி மைதானம் அல்லது மாநகராட்சி பிரதான அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.



கோவை: கோவை கணபதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகராட்சியில்13-ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஒப்பந்த முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நல குழுவினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கணபதி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பிய ஊழியர்கள், கோவை மாநகராட்சியில் 13-ஆண்டுகள் தூய்மைப் பணி செய்யும் பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு தூய்மை பணி ஓட்டுநர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

தினசரி ஊதியமாக 707-வழங்க வேண்டும். அதேபோல் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், தங்களது கோரிக்கைக்கு மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக வ உ சி மைதானம் அல்லது மாநகராட்சி பிரதான அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...