கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரம்..!

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை:கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.



கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இன்றிலிருந்து கோவை மாநகராட்சி நிர்வாகமும் அதனை செயல்படுத்த துவங்கியுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்தே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.



ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களும் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்களிடம் முககவசம் அணிந்து வருமாறு கூறிவருகின்றனர். முககவசம் அணியாமல் வரும் பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.



மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நீராபானமும் விற்பனை செய்யப்படுகிறது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...