கேலோ இந்தியா போட்டி: களரியில் 2 பதக்கங்கள் வென்ற கோவை ஈஷா சமஸ்கிரிதி மாணவர்கள்..!

தேசிய அளவில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 2 வெண்கல பதக்கங்களை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


கோவை: இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும், திறமை வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களை கண்டறியவும் கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, 2021-ம் ஆண்டிற்கான போட்டிகள் ஹரியானாவில் உள்ள பஞ்சகுலாவில் இம்மாதம் நடத்தப்பட்டன. 25 வகையான விளையாட்டு போட்டிகளில் பாரம்பரிய தற்காப்பு கலையான களரிப் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 180 இளம் வீரர்கள் பங்கேற்றனர்.



இதில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் திரு.இன்ப தமிழன் சுவடுகள் பிரிவிலும், பத்மேஸ்ராஜ் மெய்பயட்டு பிரிவிலும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். கோவையில் செயல்படும் ஈஷா சமஸ்கிரிதி பள்ளியில் களரிப் பயட்டு மட்டுமின்றி, யோகா, பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற பாரம்பரிய கலைகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

இதில் பல ஆண்டுகள் கடும் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் ‘ப்ராஜக்ட் சம்ஸ்கிரிதி’ என்ற பெயரில் இக்கலைகளை உலகம் முழுவதும் பயிற்றுவித்து வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...