பொள்ளாச்சி அருகே எச்சரிக்கை இரும்பு பலகை மீது மோதி இளைஞர் பலி.

பொள்ளாச்சி அருகில் NGGO காலனியில் எச்சரிக்கை இரும்பு பலகை மீது மோதி கேரளாவைச் சேர்ந்த இளைஞர் பலியான சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஜுனனத் (27). இவரது நண்பர் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த அபிலாஷ் (31). இருவரும் நேற்று நள்ளிரவு ஆழியார் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பொள்ளாச்சி NGGO காலனி, எஸ். பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலையோர எச்சரிக்கை தடுப்பு இரும்பு கம்பி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், வாகனத்தை ஓட்டி வந்த அபிலாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜுனனத்தை மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸ் மூலம் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...