கோவை செம்மேடு அருகே வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் முகத்தில், மிளகாய் பொடியை தூவிவிட்டு கழுத்தில் அணிந்த 1.5 பவுன் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை:கோவை ஆலந்துறை செம்மேடு சத்தியமூர்த்தி வீதியை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி ரங்கம்மாள் (75). கணவன் இறந்த பிறகு, ரங்கம்மாள் தனக்கு கிடைக்கும் முதியோர் உதவி தொகையை வைத்தும், கூலி வேலை பார்த்தும் வாழ்ந்து வருகிறார்.
நேற்று இரவு ரங்கம்மாள் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்வீட்டின் வெளியே இருந்த இரும்பு கதவை உடைத்து உள்ளே வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், தூங்கிக் கொண்டிருந்த ரங்கம்மாள் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு, கழுத்தில் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதையடுத்து, மூதாட்டி ரங்கம்மாள் சத்தம் போடவே, அந்த மர்ம நபர் வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது இரு சக்கர வாகனத்தில் ஏறி கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை காவல் நிலையத்தில் மூதாட்டி அளித்தபுகாரின் பேரில்வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே, ரங்கம்மாளை நோட்டமிட்டு அவர் தனியாக இருப்பதை அறிந்த நபர் தான் வீடு புகுந்து செயினை பறித்துச் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.