கோவை ஆனைமலை மற்றும் ஆழியாற்றில் அனுமதியின்றி பனை மரம் வெட்டியதாக புகார்-வருவாய் துறையினர் விசாரணை..!

ஆனைமலையில் உள்ள மக்கள் சக்தி நகர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், 40 பனை மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக, வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: ஆனைமலை மற்றும் ஆழியாற்றில் அனுமதியின்றி பனை மரம் வெட்டியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனைமலையில் உள்ள மக்கள் சக்தி நகர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், 40 பனை மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.

இதையடுத்து, ஆனைமலை வட்டாட்சியர் பானுமதி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அனுமதியின்றி பனை மரங்களை வெட்டிய நில உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, ஆழியாறு பொதுப்பணித்துறை வணிக வளாகங்களில் இருந்த பனை மரம் ஒன்றை வெட்டியதாக சத்தியன் என்பவரிடமும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...