வன்முறையை தூண்டும் வகையில், கோவையில் பள்ளிவாசலுக்கு எதிரே கொடிக் கம்பம் வைத்த பாரத் சேனா மாநில செயலாளர் கைது…!

கோவை ரத்தினபுரியில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் அருகே, எஸ்.டி.பி.ஐ அமைப்பினரின் கொடி கம்பம் அருகே, பாரத் சேனா கொடி கம்பத்தை வைத்து, இரண்டு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட பாரத் சேனா மாநில செயலாளர் வாசு மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் பள்ளி வாசல் எதிரே பாரத் சேனா கொடி கம்பம் வைத்த, பாரத் சேனா மாநிலச் செயலாளரை ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரி கண்ணப்பநகர் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் அருகே, எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் வழக்கமாக மாதம் ஒரு முறை கொடியேற்றி இறக்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று அங்கு ஏற்றப்பட்ட எஸ்.டி.பி.ஐகொடியை இறக்க கோரி பாரத் சேனா அமைப்பினர் ரகளை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த பள்ளி வாசல் அருகே பாரத் சேனா அமைப்பின் மாநில செயலாளர் வாசு தலைமையிலான நிர்வாகிகள், பாரத் சேனாகொடி கம்பத்தை வைத்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து வந்த ரத்தினபுரி போலீசார் இரண்டு கம்பங்களையும் அங்கிருந்து அகற்றினர்.

இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையிலும், இரண்டு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட பாரத் சேனா மாநில செயலாளர் வாசு மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...