கோவை ராமநாதபுரம் மேம்பாலம் 40-அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞர் சுயநினைவு இழப்பு - மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் ஆய்வு….!

கோவை திருச்சி சாலை, ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சாலை தடுப்பில் மோதி 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவை ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலை தடுப்பில் மோதி 40-அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராமநாதபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட இரண்டு மேம்பாலங்கள் கடந்த ஜூன் 11-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், மேம்பாலம் திறப்பட்ட முதல் நாளே இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர் சாலை தடுப்பில் மோதி உயிரிழந்தார்.

இதையடுத்து, மேம்பாலம் முழுவதும் இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகள், மற்றும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 5.30-மணியளவில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஹரிகரன் (24) என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் மேம்பாலத்தில் சுங்கம் செல்லும் பாதையில் அதிவேகமாக வந்ததாக தெரிகிறது.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் மேம்பால தடுப்பின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகரன் சுமார் 40-அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், தலை மற்றும் இரண்டு கால்களில் முறிவு ஏற்பட்டு, சுயநினைவு இழந்தார். இதையடுத்து, அங்கிருந்த அவரை மீட்டு கோவை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன் மற்றும் உதவி ஆணையாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட போலீசார் மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

ஒரு வழி சாலையாக உள்ள இந்த பாதையில் சிலர் எதிர் திசையில் வாகனங்களை இயக்குவதாகவும், இதனாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக துணை ஆணையாளர் தெரிவித்தார். மேலும், வேகத்தடைகள் அமைக்கவும், ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று இரவு வேகத்தடை ஒளிரும் விளக்குகளுடன் பொருத்த உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...