எதிரே வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுனர் முயன்ற போது இடது பக்கம் இருந்த பாலத்தின் சுவற்றில் மோதியதில் பேருந்தில் இருந்த ஆறு பேருக்கு காயங்கள் ஏற்பட்டது.
கோவை:கோவை பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் சீனிவாசபுரம் ரயில்வே பாலத்தின் அடியில் அரசு பேருந்து சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
சர்க்கார்பதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பேருந்து சீனிவாசபுரம் ரயில்வே மேம்பாலம் அடியில் வந்துகொண்டிருந்தது. ஓட்டுனர் சுரேஷ்குமார் பேருந்தை இயக்கி வந்தார். அப்போது திருச்சியில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி முன்னால் வந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது.
லாரியை முஹமது சாலி என்பவர் இயக்கி வந்தார். அப்போது எதிரே வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுனர் முயன்ற போது இடது பக்கமிருந்த பாலத்தின் சுவற்றில் பேருந்து மோதியது.

இதில் பேருந்தில் இருந்த ஆறு பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரியின் மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் லாவகமாக பேருந்தைஇயக்கியதில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக சிறிது நேரம் பொள்ளாச்சி மீன்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீசார் விபத்துக்குள்ளான பேருந்தை மீட்கும் பணியில்ஈடுபட்டு, போக்குவரத்தை சீர்படுத்தினர்.