கோவையில் காவல் துறையால் “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்” துவக்கம்: பள்ளி குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் என எஸ்.பி.நம்பிக்கை..!

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பள்ளி குழந்தைகளுக்காக “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்” என்ற விழிப்புணர்வு திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார்.



கோவை: கோவையில் பள்ளி குழந்தைகளுக்காக “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்” என்ற விழிப்புணர்வு திட்டத்தைகோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார்.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பள்ளி குழந்தைகளுக்காக “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்” என்ற விழிப்புணர்வு திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார். மேலும் அதை தொடர்ந்துபொதுமக்கள் தவறவிட்டு 100-க்கும் மேற்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறும் போது, கடந்த 3- மாத காலத்தில் 235-செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், பள்ளி குழந்தைகளுக்காக“ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்” என்ற விழிப்புணர்வு திட்டம் கோவை மாவட்ட காவல் துறையால் துவங்கப்பட்டுள்ளது எனவும், இத்திட்டம் குழந்தைகளுக்கு இருக்கும் பாதிப்பை அவர்களுக்கே தெரியபடுத்தி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம்துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



இதனை உட்கோட்ட வாரியாக பள்ளிக்கூடங்களுக்கு நேரில் சென்று, முதலில் ஆசிரியர்களுக்கு இது குறித்து தெரிய படுத்த உள்ளதாகவும், குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் வந்தால் அதை எவ்வாறு காவல்துறையினரிடம் அனுகி தீர்வு காணலாம் என எடுத்துரைக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள 997-பள்ளிகளுக்கும் சென்று இந்த விழிப்புணர்வு திட்டம் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு எடுத்து கூற உள்ளதாகவும் கூறினார். இதற்காக 10-வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 10-வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் என இரண்டு பிரிவுகளாக பிரித்து 10-வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு “சரியாக தொடுதல்” “தவறான தொடுதல்” போன்ற அடிப்படைகள் குறித்தும், அவ்வாறு யாரேனும் அணுகினால் யாரை அணுக வேண்டும் என தெரிவிக்க உள்ளோம், எனவும் 10- வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக சரியான அனுகுமுறைகள் போன்றவை குறித்தும் எடுத்துரைக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக கடந்த 2-மாதங்களாக தனிப்படை இதற்காக பணியாற்றி உள்ளதாக கூறினார். மேலும், தற்போதைய காலத்தில் குழந்தைகளுக்கு இப்படியான பிரச்சனை அவர்களுக்கு நெருக்கமானவர்களால் தான் அதிகம் நிகழ்வதாகவும் கூறினார். வருகிற திங்கட்கிழமை முதல் இந்த விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சி தொடங்கஉள்ளதாக கூறினார்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...