கோவையில் உரிமம் புதுப்பிக்காத ஆசிரமத்திலிருந்து 18-குழந்தைகள் வேறு ஆசிரமத்திற்கு மாற்றம்..!

கடந்த 10-ஆண்டுகளாக செயல்படும் இந்த ஆசிரமத்தின் உரிமம் புதுப்பிக்க படாமல் முறையான ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 18-குழந்தைகள் மாநகரிலுள்ள சத்குரு சேவா என்ற ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


கோவை: கோவையில் உரிமம் புதுப்பிக்காத ஆசிரமத்திலிருந்து 18-குழந்தைகள் வேறு ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கோவை மதுக்கரை - சீராபாளையம் செல்லும் சாலையில் உள்ள அன்னை நகரில் புற்றிடகொண்டீஸ்வரன் எனும் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

கோவை தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கிருஷ்ணசாமி ஆசிரமத்தின் தலைவராக உள்ளார். இந்த ஆசிரமத்தில் 18 குழந்தைகள் தங்கியிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (54) வார்டனாக உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக செயல்படும் இந்த ஆசிரமத்தின் உரிமம் புதுப்பிக்க படாமல் உள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், பவித்ராதேவி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த 18 குழந்தைகள் மாநகரிலுள்ள சத்குரு சேவா என்ற ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து மதுக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...