33-வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் தூய்மைப்பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், வழங்கினார்.
கோவை: வார்டு எண்.33-க்குட்பட்டபகுதியில் தூய்மைப்பணியாளா்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 33-வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம் தூய்மைப்பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், வழங்கினார்.

பின்னர் மாநகராட்சி மேற்கு மண்டலம், கவுண்டம்பாளையம் பகுதியில் மக்கும் குப்பை கழிவுகளை கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு வரும், மையத்தை (Micro Composting Center) மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி குப்பையில்லா முன்மாதிரி வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் (பொ) சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில் பாஸ்கர், ஹேமலதா, உதவி பொறியாளர்கள் ஜீவராஜ், ராஜேஸ் வேணுகோபால், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுபஸ்ரீசரத், சுகாதார ஆய்வாளர் சலைத்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.