அதிமுகவில் ஏற்பட்டுள்ள எழுச்சி திமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கும் - பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு…!

நடைபெற்று வரும் இந்த பொதுக்குழு கூட்டம் தொண்டர்களின் எழுச்சியாக மாறியுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை கொடுக்கும் நபராக மக்களின் மனதில் ஒருமித்த தேர்வாக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள் - எஸ்.பி. வேலுமணி.


கோவை: அ.தி.மு.க.வில் கடந்த ஒரு வார காலமாக ஒற்றை தலைமை குறித்தான விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில்.பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது. கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வந்தால் யாருடைய தலைமையில் கட்சி இயங்கும் என்பது குறித்து இ.பி.எஸ் ஒ.பி.எஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது.

கூட்டத்தில், கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகள் இ.பி.எஸ் க்கு ஆதரவாக நின்றனர். இந்நிலையில், நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக மக்களின் இதயங்களில் நிரந்தரமாய் குடி கொண்ட தெய்வமாய் உள்ள எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவை ஒன்றரை கோடி தொண்டர்களின் கழகமாக மாற்றினார் ஜெயலலிதா.

தற்போது நடைபெற்று வரும் இந்த பொதுக்குழு கூட்டம் தொண்டர்களின் எழுச்சியாக மாறியுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை கொடுக்கும் நபராக மக்களின் மனதில் ஒருமித்த தேர்வாக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்று அவர் வரும் வழியெல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள்.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கட்சியை கட்டிக்காத்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை வழங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது, தமிழக மக்களின் விடிவெள்ளியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, வாழும் காலத்தில் வரலாறு படைக்கும் நபராக உள்ளார். இந்த கூட்டத்தில், பங்கேற்ற அனைவருக்கும் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய எழுச்சி தான் திமுக ஆட்சிக்கான சாவு மணியாக இருக்கும். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆவார். அனைத்து தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒற்றை தலைமைக்கு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் சரியான தேர்வு. அவர் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும்", என்று பேசினார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...