சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கல்லூரி மாணவர்களுடனும், கல்லூரி நிர்வாகத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தியும், எந்தவித முடிவும் எட்டப்படாததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் முழுமையாக கல்லூரி கட்டணங்கள் செலுத்தியும், ஹால் டிக்கெட் தரவில்லை என தனியார் கல்லூரியின் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையம் பகுதியில் ஆதித்யா கல்லூரி செயல்பட்டு வருகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைந்துள்ள இந்த தனியார் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இன்று முதல் இந்த கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் முறையாகக் கல்வி கட்டணம் செலுத்தியும், ஹால் டிக்கெட் தரவில்லை என 65-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கல்லூரி மாணவர்களுடனும், கல்லூரி நிர்வாகத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தியும், எந்தவித முடிவும் எட்டப்படாததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், கல்லூரிக்கு காலதாமதத்தினால் வரும் மாணவர்களுக்கு வருகைப் பதிவு நோட்டில் தாங்கள் வரவில்லை என பதிவு செய்து அபராத கட்டணங்களை வசூல் செய்வதாகவும், கல்லூரியின் முழு கட்டணங்களைச் செலுத்தினால் ஹால் டிக்கெட் தருவதாகக் கூறி முழுமையாக கட்டணம் செலுத்தியும், ஹால் டிக்கெட் தரவில்லை எனவும், இன்று நடந்த தேர்வு தங்களால் எழுத முடியவில்லை, இதனால் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.