கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் மர்ம மரணம்..!

இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, வழக்கு பதிவு செய்து உயிர் இழப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அரசு மருத்துவமனை புதியகட்டிடத்தின் பின்புறம் இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில், கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிழக்கு போலீசார் அங்கு சென்று அசைவின்றி கிடந்த இளைஞரை மருத்துவரிடம் கொண்டு சென்றனர்.

அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, உயிரிழந்த இளைஞரின் உடைமைகளை சோதனை செய்து பார்த்ததில், அவர் ஆத்து பொள்ளாச்சி கிராமத்தைச் சேர்ந்த கந்தகுமார்(38) என்பதும், மர ஆசாரியாக பணியாற்றி வந்ததும், மேலும் இவர் மீது காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

பின்னர், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, வழக்கு பதிவு செய்து உயிர் இழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...