10, 12-ம் வகுப்பு மாணவர்கள் வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்..!

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு காந்த மே மாதம் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை கல்வி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் மேற்படிப்புக்காக விண்ணப்பிக்க மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படுவதால், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 24-ம் முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கும் பணி தொடங்க உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல, தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், பொது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்குமறு தேர்வு நடக்க உள்ளது. அதுகுறித்த தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...