கணேசபுரம் பகுதியில் குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள், செடி, கொடிகளை தூர்வாரி சுத்தம் செய்து கழிவுநீர் தங்குதடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையாளர் உத்தரவிட்டார்.
கோவை:வார்டு எண்.100-க்குட்பட்டபகுதியில் கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற கோவை மாநகராட்சி ஆணையாளர்உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.100-க்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், அப்பகுதியிலுள்ள கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள், செடி, கொடிகளை தூர்வாரி சுத்தம் செய்து கழிவுநீர் தங்குதடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கே.கருப்புசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், உதயகுமார், அஸ்லாம் பாஷா, கார்த்திகேயன், சரளா, உதவி பொறியாளர் சபரீஸ், மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.