கோவையில் திருமணம் ஆகாமல் 3 குழந்தைகளுக்கு தாயான மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? சமூக நலத்துறையினர் விசாரணை….!

திருமணம் ஆகாத அந்த பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டரா? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. அந்த பெண் உடல் ரீதியாக சோர்வுடன் இருந்ததால், அவரை மீட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் அவரை காப்பகத்தில் சேர்த்தனர்.


கோவை: கோவை பேரூர் அருகே பாதியளவு கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரும், அவருடன் ஒரு ஆண் வசித்து வருவதாகவும், அந்த பெண் பாலியல் ரீதியாக துண்புறுத்தப்படுகிறாரா? என்ற சந்தேகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில் சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் தங்கமணி தலைமையிலான அதிகாரிகள் அந்த வீட்டுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புகாரில் தெரிவிக்கப்பட்டது போல, பாதி கட்டி முடிக்கப்பட்ட சிறிய வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இருந்துள்ளார்.

அங்குச் சென்ற அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது, தற்போது இருக்கும் அந்த வீட்டில் கடந்த 6 மாதங்களாக அந்த பெண் வசித்து வருவதாகவும், கடந்த 2018 – 2020 ஆண்டுக்குள் அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணிற்கு மூன்றாவது குழந்தையும் பிறந்துள்ளது. அந்த குழந்தை, உக்கடம் பகுதியில் உள்ள காப்பாகத்தில் இருப்பதும் தெரியவந்தது. அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகாத நிலையில், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது யார்? அவருடன் வசித்து வந்தவர் யார்? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் உடல் ரீதியாக சோர்வுடன் இருந்ததால் அவரை மீட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், நல்லாம்பாளையத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். இதையடுத்து, சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பேரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...