திருப்பூர் ஆட்சியரை தொடர்ந்து கோவை ஆட்சியரின் புகைப்படத்துடன் போலியாக வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி மோசடி..!

அமேசான் கிஃப்ட் Pay Coupon மூலம் பணம் அனுப்ப தனது பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தி உள்ளார்.



கோவை: ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பெயரில் அவரது புகைப்படத்துடன் போலியாக வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி, மோசடியில் ஈடுபட முயன்ற ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து வாட்ஸ் அப் மூலம் மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கோவை ஆட்சியர் சமீரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தி உள்ளார். அமேசான் கிஃப்ட் pay coupon மூலம் பணம் அனுப்ப தனது பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், இதே போல திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி போலி வாட்ஸ்அப் எண் மூலம் அரசு ஊழியர்களிடம் பணம் கேட்டு மெசேஜ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...