கோவையில் கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ஜூலை 9-ம் தேதி நடத்த முடிவு..!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தற்செயல் தேர்தல் ஜூலை 9-ம் தேதி நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ஜூலை 9-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,

கிணத்துக்கடவில் நம்பர்.10 முத்தூர் கிராம ஊராட்சி தலைவர், குருநெல்லிபாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர், சொக்கனூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர், நல்லட்டிபாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதிவுக்கும், ஆனைமலையில் வாழைக்கொம்பு நாகூர் கிராம ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர், பொள்ளாச்சி தெற்கில் சிங்காநல்லூர் கிராம ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர், பொள்ளாச்சி வடக்கில் வடக்கிப்பாளையம் கிராம ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர், தொண்டாமுத்தூரில் பேரூர் செட்டிபாளையம் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக ஜூலை 9-ம் தேதி காலை 7-மணி முதல் 6-மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 12-ஆம் தேதி காலை 8-மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூன் இருபத்தி ஏழாம் தேதி மாலை 5-மணி வரை நடைபெறும் எனவும், வேட்புமனு ஆய்வு செய்தல் பணி ஜூன் 28-ம் தேதி நடைபெறும் எனவும், வேட்பு மனுவை திரும்பப் பெறுவது ஜூன் 30-ம் தேதி பிற்பகல் 3-மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் 11-வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும், ஐந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 8 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...