பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் பிளஸ்-2 தேர்வில் தோல்வி-மனமுடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

கோவையில் பொள்ளாச்சி அருகிலுள்ள கோட்டூரில் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் பொள்ளாச்சி அருகிலுள்ள கோட்டூரில் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைகாரன்புதூரை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னசாமி, ஈஸ்வரி தம்பதியரின் மகன் உதயகுமார்(18). இவர் கோட்டூரில் உள்ள தாத்தா முத்துசாமி வீட்டில் தங்கி கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன் உதயகுமார் வேதியியல் பாடப்பிரிவில் மட்டும் தேர்ச்சி பெற்று மற்ற பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் கோட்டூரில் உள்ள தனது தாத்தா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...