தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு நிறைவு பேரணி - 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு நிறைவு பேரணியில், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறு பேரணிச் சென்றனர்.


கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு நிறைவு பேரணியில், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறு பேரணிச் சென்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 வது மாநில மாநாடு கோவையில் கடந்த 19 ஆம் தேதி துவங்கியது.



சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற மாநாட்டின் நிறைவாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தாகாலணி வரை சுமார் 500க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேரணியாகச் சென்றனர். முன்னதாக ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த ஊழியர்கள் தனி தனியாக போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.



அதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் காதில் பூ வைத்து, நெத்தியில் நாமம் சாத்தியவாறு தரமான பேருந்து வழங்க வேண்டும், தூய்மையான கழிவறை வேண்டும், போக்குவரத்து ஊழியர்களின் நீண்ட ஆண்டு கோரிக்கைகளை செவி சாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாட்டுப்பாடியும், கைகளை தட்டியும் ஆரவாரம் செய்தவாறு பேரணிச் சென்றனர்.



இதையடுத்து சிவானந்தாகாலணி பகுதியில் பொதுக்கூட்டத்துடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 வது மாநில மாநாடு நிறைவடைகிறது.



தொழிற்சங்கத்தினர் பேரணியையொட்டி, வழி நெடுக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...