இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புல்டோசர் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்தும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில குழு உறுப்பினர் ஜோதிகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர்கலந்துகொண்டு அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புல்டோசர் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்தும்மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதை தொடர்ந்து பேசிய வழக்கறிஞர்கள், ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கூலி ஆட்களை எடுக்க துணிந்து இருக்கிறது மத்திய அரசாங்கம் என்றும், இது மிகப்பெரிய மோசடி ஆகும் எனவும் தெரிவித்தார்.
ஓய்வூதியம் பணி பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்து நிரந்தரமற்ற சூழலில் 4 ஆண்டுகளுக்குப்பின் கைவிடப்படும் வீரர்களின் நிலைமை என்ன ஆகும் என கேள்வி எழுப்பினர்.

ராணுவ வீரர்களுக்கு இதுதான் நிலை என்றால் மற்ற பல துறைகளிலும் இதைவிட மோசமான நிலை ஏற்படுத்தப்படும் எனவும், இந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பது மகத்தான தேசபக்த கடமை என கூறினர்.
இளம் வயதினரை ஆர்எஸ்எஸ் யின் ஊழியர்களாக மாற்றி ராணுவ ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் திட்டமாகும் என குற்றம் சாட்டினர். இந்தியா முழுவதும் தங்களது வாழ்வியல் உரிமைக்காகப் போராடும் சிறுபான்மை மக்களின் வாழ்விடங்களை புல்டோசர் கொண்டு அரசியலமைப்பு சட்ட மாண்புகளைக் குழிதோண்டிப் புதைக்கும் மத்திய அரசை கண்டிப்பாககூறினர்.