கோவைப்புதூர் பகுதியில் அதிக பாரத்துடன் டிப்பர் லாரிகள் செல்வதால் அடிக்கடி தண்ணீர் குழாய்கள் உடைப்பு ஏற்படுவதாகவும், குடியிருப்பு பகுதி வழியாக லாரிகள் இயக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
கோவை: கோவைப்புதூர் குடியிருப்பு பகுதி வழியாக கேரளாவிற்கு அதிக பாரத்துடன் லாரிகள் இயக்கப்படுவதை கண்டித்து அப்பகுதி மக்கள் 10-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் - மைல்கல் அருகே 6-கிரசர்கள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட ஜல்லி லோடுகள் டிப்பர் லாரி மூலம் கேரளாவுக்கு அனுப்பட்டு வருகிறது.
குறிப்பாக அதிக பாரத்துடன் மைல்கள் பகுதியில் இருந்து கோவைப்புதூர் செல்ல தொட்டிராயன் கோவில் வீதி வழியாக இயக்கப்படுவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டதாக கூறி அப்பகுதி குடியிருப்பு மக்கள் திடீரென அங்கு வந்த டிப்பர் லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-30 வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைந்துள்ள இந்த பகுதியில் அதிக பாரத்துடன் டிப்பர் லாரி இயக்கப்படுவதாகவும், இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
இதுவரை 5-பேர் விபத்தில் சிக்கியுள்ள நிலையில் ஒருவர் தன் காலை இழந்து பெட்டி வைத்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிவித்தனர். மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கூடுதல் லாரிகள் இயக்கப்படுவதாக குழந்தைகள் விளையாட கூட வெளியே அனுப்ப அச்சப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், அதிக பாரத்துடன் செல்வதால் அடிக்கடி தண்ணீர் குழாய்கள் உடைப்பு ஏற்படுவதாக கூறும் மக்கள் உடனடியாக குடியிருப்பு வழியாக லாரிகள் இயக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, அந்த சாலை மூடப்பட்டது. மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.