கோவையில் இயங்கி வரும் ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும், பெண்களை துறவிகளாக மாற்றக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தந்தை பெரியார் திராவிட கழகம், தெய்வத் தமிழ் பேரவை உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை: கோவையில் இயங்கி வரும் ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகம், தெய்வத் தமிழ் பேரவை உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஈஷா அறக்கட்டளையை அரசுடைமை ஆக்க வேண்டும், அங்கிருந்து வெளியேறும் கழிவுநீரை விளை நிலத்தில் வெளியேற்றக் கூடாது, பழங்குடியினர் நில அபகரிப்பு, பெண்களைத் துறவிகள் ஆக்கக் கூடாது என்று பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில், ஈஷாவில் பணிபுரியும் பெண்களின் குடும்பத்தார் சிலர் பங்கேற்றனர். அவர்கள், ஈஷாவில் துறவிகளாக உள்ள பெண்களை வெளியேற்றும் படிவலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிகழ்வில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், தெய்வத் தமிழ் பேரவை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மண்வளப் பாதுகாப்பை வலியுறுத்தி 100 நாட்களில் 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட ஈஷா நிறுவனர் சத்குரு, இன்று ஜூன் 21-ம் தேதி கோவை திரும்ப உள்ள நிலையில்,நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.