ஒட்டன்சத்திரம் திட்டம்: கோவை பொள்ளாச்சியில் அரசு ஆணையை ரத்து செய்யக்கோரி 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்..!

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடத்த விவசாயிகள் மற்றும் வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.


கோவை: ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் வருகிற 27-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக பாலாறு படுகை விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

கோவை மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாகவும் பொள்ளாச்சி, ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 50-ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்காகவும், ஆழியாறு அணையிலிருந்து, ரூபாய் 930-கோடி செலவில் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இத்திட்டத்திற்கு, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று ஆழியாறு படுகை விவசாயிகள் மற்றும் பொள்ளாச்சியில் உள்ள வணிகர்கள் பல்வேறு கூட்டமைப்பினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



ஆழியாறு அணையில் இருந்து தண்ணீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும்,அரசு செவி சாய்க்காததால் வரும் 27-ஆம் தேதி விவசாயிகள், வணிகர்கள் மற்றும் பல்வேறு கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.250-கோடி செலவில்காவேரி ஆறு, உள்ளிட்ட 4-திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 150-கிலோமீட்டர் தொலைவில் உள்ளஆழியாறு அணையில் இருந்து தண்ணீரை ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.



ஆழியாறு அணையை நம்பியுள்ள பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விலை நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவே, தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...